இன்று ஒரு சொல் - எய்து-தல்
பொருள் :
1. அணுகுதல் - நெடியோயெய்த வந்தனம் (புறநானூறு)
2. அடைதல் - ஏமம் வைக லெய்தின்றா லுலகே (குறுந்தொகை)
தூநிறக் கங்கையாள் சூழ லெய்தினான் (கம்பராமாயணம்)
3. பணிதல்
4. நீங்குதல்
5. பொருந்துதல் - காலத்தோ டெய்த வுணர்ந்து செயல் (திருக்குறள்)
6. சம்பவித்தல் - எட்டி குமர னெய்திய துரைப்போன் (மணிமேகலை)
7. உண்டாதல் - மாசெனக்கெய்தவும் (கம்பராமாயணம்)
8. போதியது ஆதல்- சுனைவாய்ச் சிறுநீரை யெய்தாதென் றெண்ணி (ஐந்திணை ஐம்பது)