இன்று ஒரு சொல் 
இலக்கியம்

இன்று ஒரு சொல் - புரை

Staff Writer

1. ஒப்பு - (பிங்கல நிகண்டு)

2. உயர்ச்சி- முனிவன்புரைவரைக் கீறி (பரிபாடல்)

3. பெருமை- புரையோய் புரையின்று (பரிபாடல்)

4. புழை; உட்டுளை- புரைப்புரை கனியப்புகுந்து (திருவாசகம்)

5. உட்டுளைப்பொருள்- (பிங்கலநிகண்டு)

6. குரல்வளை

7. விளக்குமாடம்

8. குற்றம் - புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின் (திருக்குறள்)

9. உள்ளோடும் புண்

10. கண்ணோய்வகை

11. பொய்- வடிவிற்பிறந்த புகரிலும் புரை

12. வீடு- புரைபுரை யாலிவை செய்யவல்ல (நாலாயிர திவ்விய பிரபந்தம்)

13. மண்புரைபெருகியமரமுள் கானம் (ஐங்குறுநூறு)

14. ஆச்சிரமம் - புரையுட் புக்கனர் (கம்பராமாயணம்)

15. அறை

17. பூமி

18. பழமை