இன்று ஒரு சொல் - முந்நீர்
பொருள் : கடல், ஆழி
ஆற்று நீர், கடலின் கீழ்ப் பரப்பில் இயற்கையாக ஊற்றுகளிலிருந்து உருவாகும் நீர், மழை நீர் ஆகிய மூன்று வழிகளில் உருவானது என்பதால், இப்பெயர் பெற்றது.
இலக்கியத்தில் :
முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை
- தொல்காப்பியம்
முழங்குமுந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்து பட்ட வியன் ஞாலம்
- புறநானூறு