இன்று ஒரு சொல் 
இலக்கியம்

இன்று ஒரு சொல்- அத்தம்

Staff Writer

இன்று ஒரு சொல் - அத்தம்  

பொருள் :

1. கரிசலாங்கண்ணி

2. கண்ணாடி - அத்தமதின் முன்பின் போல்

3. வழி (பிங்கல நிகண்டு)

4. அருநெறி- ஆளி லத்த மாகிய காடே (புறநானூறு)

5. காடு (திவாகர நிகண்டு)

6. ஆண்டு சகாத்தம் (கம்பராமாயணம்)

7. பொருள் - உண்டான வத்தமும்

8. பொன் (பிங்.)

9. சொற்பொருள் - ஓதி யத்த முணர்ந்த பெருந்தவர்

10. பாதி (பிங்.)

11. அஸ்தகிரி. அத்த மென்னும் பொன் னஞ் சிலம்பு

12. கை (பிங்.)

13. ஒருநட்சத்திரம். அத்தத்தின் பத்தாநாட் டோன்றிய வச்சுதன் (நாலாயிர திவ்விய பிரபந்தம்)