இன்று ஒரு சொல் - ஐயவி
பொருள் விளக்கம்:
1. வெண்சிறுகடுகு - ஐயவி புகைப்பவும் (புறநானூறு)
2. கடுகு (திவாகர நிகண்டு)
3. ஒரு நிரை (தொல்காப்பியம்)
4. கடுக்காய் (மலைபடுகடாம்)
5. கதவிற்குக் காவலாகப் புறவாயிலிலே தூக்கப்படும் துலாமரம். பூணாவையவி தூக்கிய (பதிற்றுப்பத்து)
6. அம்புகளின் கட்டு (பதிற்று.)