இன்று ஒரு சொல் 
இலக்கியம்

இன்று ஒரு சொல் - தொடுப்பு

Staff Writer

இன்று ஒரு சொல் - தொடுப்பு

பொருள் விளக்கம் :

1. செய்கை- எய்கை

2. தொடர்ந்திருத்தல்

3. கட்டுகை

4. கட்டு

5. சங்கிலி

6. விதைப்பு. தொடுப்பி னாயிரம் வித்தியது விளைய (மதுரைக்காஞ்சி)

7. கலப்பை (பிங்கல நிகண்டு)

8. தந்திரம்

9. வளைத்து உழுகை - தொடுப் பே ருழவர் (சிலப்பதிகாரம்)

10. குறளை (திவாகர நிகண்டு)

11. தொடுசு - அவனுக்கும் அவளுக்கும் வெகுகாலமாகத் தொடுப்புண்டு.

12. கூட்டுறவு

13. செய்கைத் தொடர்ச்சி

14. பாத அணி

15. சோரநாயகன் அல்லது கூத்தி

16. கட்டுக்கதை

17. மரக்கொம்பு

18. பழக்கம்

19. தொடக்கம்