இன்று ஒரு சொல் 
இலக்கியம்

இன்று ஒரு சொல் - கிழமை

Staff Writer

இன்று ஒரு சொல் - கிழமை

பொருள் :

1. உரிமை - உணர்ச்சிதா னட்பாங் கிழமை தரும் (திருக்குறள்)

2. உறவு - அவனுக்கும் இவனுக்கும் என்ன கிழமை?

3. நட்பு - எமர்நும ரெ ழுவர்காறு நின்றது கிழமை (சீவக சிந்தாமணி)

4. தற் கிழமை, பிறிதின்கிழமை; ஒன்றற்கும் மற்றொன்றற்கும் உள்ள தொடர்பைத் தெரிவிப்பதாகிய ஆறாம் வேற்றுமைப் பொருள் (நன்னூல்)

5. குணம் (திவாகர நிகண்டு)

6. ஏழு கோள்களையொட்டிய நாள்களின் பெயர்கள்- ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி. (திவா. நிக.)