இன்று ஒரு சொல் - தகவு
பொருள் விளக்கம் :
1. தகுதி - தகவிலை கொல்லோ சம்பாபதியென (மணிமேகலை)
2. உவமை, ஒப்பீடு (சூடாமணி நிகண்டு)
3. குணம் (பிங்கல நிகண்டு)
4. பெருமை - தகவேயுடை யான் றனைச்சார (திருவாசகம்)
5. அருள். (சூடா.)
6. நடுவுநிலை - தக்கார் தகவிலரென் பது (திருக்குறள்)
7. வலிமை - வாரிகடக்குந் தகவின்மை (கம்பராமாயணம்)
8. அறிவு - தக்கதே நினைந்தனை தகவோய் (கம்பரா.)
9. தெளிவு
10. கற்பு - தகவுடை மங்கையர் (பரிபாடல்)
11. நல்லொழுக்கம்