இன்று ஒரு சொல்- உறுதல்
பொருள் விளக்கம்:
1. இருத்தல்
2. சம்பவித்தல் - மெய்த்திருவந் துற்றா லும் (நளன் கதை)
3. தங்குதல்
4. நன்மையாதல் - இரவாமை கோடி யுறும் (திருக்குறள்)
5. உறுதியாதல் - வேல்வா யுயிர்வழங்கும் வாழ்க் கை யுறும் (புறப்பொருள் வெண்பாமாலை)
6. வருந்துதல்
7. மனத்தினிகழ்தல் - நினக்குறுவது சொல்லுதி (கம்பராமாயணம்)
8. மிகுதல் - பல் லெலா முறத்தோன்றும் பகுவாயாள் (கம்பராமாயணம்)
9. பழுதுபடுதல் - (திருக்குறள்)
10. சார்ந்திருத்தல் - அங்குற்றே னல்லேன் (நாலாயிர திவ்விய பிரபந்தம்)
11. பொருந்துதல் - நீலுறு மணிசெய் மாடம் (இரகு. நகரப். 42).
12. படுதல் - நெருப்புற்றபோல (சீவகசிந்தாமணி)
13. ஓரிடம் அடைதல் - எங்குற்றா யென்றபோதா லிங்குற்றேனென் கண்டாயே (தேவாரம்)
14. பரிசித்தல் - கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் (திருக்குறள்)
15. அன்புகொள்ளுதல் - யாமுற்றா லுறா அதவர் (திருக்குறள்)
16. ஒத்தல் - உண்டுபொழி லிமையவர்க ளுலக முறுவதுவே (சீவகசிந்தாமணி)
17. தொடங்குதல் - யான் மொழிய லுற்றேன் (கம்பராமாயணம்)
18. அடைதல்
19. அனுபவித்தல் - உற்றலாற் கயவர்தேறார் (தேவாரம்)
20. நினைத்தல் - வில்லு மல்லதிழைக்சலுறாள் (நா. திவ். பிரபந்தம்)