இன்று ஒரு சொல் - அண்ணல் பொருள் விளக்கம் :1. பெருமை - (பிங்கல நிகண்டு) 2. தலைமை - (திருக்கோவையார்) 3. அரசன்- (சூடாமணி நிகண்டு) 4. பெருமையிற் சிறந்தோன் - (பிங்.) 5. முல்லைநிலத் தலைவன்- (தொல்காப்பியம்) 6. கடவுள் - அண்ணலருளானண்ணி (சிவப்பிரகாசம்).