எழுத்து: அறிவுமதி; தூரிகை: ரவிபேலட்
’தோல் எறி பாண்டிலின்'
-அகநானூறு-217
போர்க் கருவிகளில்
கேடயம்
என்கிற
இக்கருவி
உடல் ஆளுமையோடு
மூளை
ஆளுமையையும்
அதாவது
'சூழ்ச்சி'
ஆளுமையையும்
பயன்படுத்திய
போர்க்
கருவியாக
உள்ளது.
வேல்
வாள்
என்பன
நேருக்கு நேர்
நின்று
போரிடு
கருவிகள்.
கேடயம் என்பது
எதிராளிகளின்
வேல்
வாள் தம்மைத் தொடாமல்
தடுத்தாள்கிற
கருவியாகத்தான்
தொடக்கத்தில்
உருவாக்கப்பட்டது.
கால வளர்ச்சியில்
கண்ணாடித்
துண்டுகளை
அதில் வைத்துத்
தைத்திருக்கிறார்கள்!
ஏன்?
ஏனா!
கண்ணாடித்
துண்டுகளில்
கதிரவன்
ஒளியை
வாங்கி வாங்கி
எதிராளியின்
கண்களைக்
கூசச்
செய்து
அந்த
நொடிகளில்
அவரை
நிலைகலங்க வைத்து
வெல்வதற்காகத்தான்!
அறம் நழுவிய
செயல் அல்லவா?
ஆமாம்!
பின்னே..
போர் என்பது என்ன?
வேட்டை
உத்திகளின்
விளைச்சல்தானே!