புண்தேர் விளக்கு-அகநா-111
போர்க்களம்
என்பதென்ன..
சாவுக்
களம்தானே!
இறந்து கிடப்பவர்களும்
இன்னும்
சில நொடிகளில்
இறந்திட
இருப்பவர்களுமாக
இறைந்து
கிடக்கும்
குருதிக் களம்தானே
அது!
அத்தகைய
குருதிச்சகதியில்
இரவின்
பேரிருட்டிலும்
இறங்கிப் போய்
சாவிலிருந்து மீட்கும்
அளவிற்கான
புண்ணுடையவர்களைத்
தேடித் தேடி
அவர்களுக்கு
மருத்துவம்
பார்த்த
அன்றைய
மருத்துவத் தாயர்களின்
கையில்
ஏந்தியிருந்த
விளக்கையே
'பாலைபாடிய பெருங்கடுங்கோ'
"புண்தேர் விளக்கு"
என்கிறார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில்
கையில் விளக்கேந்தி
களத்தில்
காயம் தேடிய
மருத்துவத் தாய்
பிளாரன்சு நைட்டிங்கேர்ல்
அவர்களுக்கு
முன்னோடியாய்
மூவாயிரம் ஆண்டுகளுக்கு
முன்னதாகவே
சங்கத்தமிழ்க்
களத்தில்
மருத்துவ
விளக்கேந்தியிருக்கிறாள்
ஒரு
தமிழச்சி
என்பது
வியக்க
வைக்கிறதல்லவா!