ரஜினிகாந்துடன் எஸ்.ராமகிருஷ்ணன்
ரஜினிகாந்துடன் எஸ்.ராமகிருஷ்ணன் 
இலக்கியம்

படைப்பாளிகளைத் தேடிப் போய் சந்திப்பார் ரஜினிகாந்த்! – எஸ். ராமகிருஷ்ணன்

Staff Writer

தமிழில் ஏராளமான சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். அவருடன் நடிகரும் எழுத்தாளருமான ஷாஜி நடத்திய நேர்காணலின் மூன்றாம் பகுதி.

“நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்ததாலும், தனிப்பட்ட முறையில், அவர் சிறந்த மனிதன். பெரிய பண்பாளர். நிறைய படிக்கக் கூடியவர். அநேகமாக எல்லா மொழிகளிலும் உள்ள முக்கிய படைப்பாளிகளுடனும் நேரடி தொடர்பில் இருப்பவர். அவர்களைத் தேடிப் போய் பார்க்கக் கூடியவர். பழகக் கூடியவர். தமிழின் முக்கிய படைப்பாளிகள் பலருடனும் சந்தித்து உரையாடியிருக்கிறார். ஜெயகாந்தன், சுஜாதா போன்ற தமிழின் பல முக்கிய எழுத்தாளர்களை சந்தித்திருக்கிறார்.

படிப்பது குறித்து விவாதிக்க அவருடன் நண்பர்கள் இல்லை. விவாதிப்பதற்கும், பேசுவதற்கும், தெரிந்துக் கொள்வதற்குமான ஒரு நண்பனாகத்தான் நான் அவருடன் பழக ஆரம்பித்தேன். கிட்டதட்ட ஒரு இருபத்து ஐந்து வருடங்களாக இந்த நட்பு இருக்கு.

தான் ஒரு சினிமாவில் பெரிய நட்சத்திரம் என்று காட்டிக் கொள்ள மாட்டார் ரஜினிகாந்த். மிகச்சிறந்த நண்பனாகத்தான் எப்போதும் இருப்பார்.

எனக்கு இயல் விருது அறிவிக்கப்பட்டது, ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். விருது வழங்கும் விழாவில், இலக்கியவாதிகள் நிரம்பியிருந்த மேடையில் கலந்து கொண்டு பேசினார். எந்தளவுக்கு அவர் இலக்கியத்தை நேசிக்கிறார் என்பதற்கான அடையாளம் இது.” என்கிறார் எஸ்.ரா.