இன்று ஒரு சொல் - காரி
பொருள் விளக்கம் :
1. கருமை. (பிங்கல நிகண்டு)
2. கருநிறமுடையது. (திவாகர நிகண்டு)
3. கரிக்குருவி. கட்சி யுட் காரி (புறப்பொருள் வெண்பாமாலை)
4. காக்கை. (திவாகர நிகண்டு)
5. சனி. காரிவாரத்தில் (குற்றாலக் குறவஞ்சி)
6. நஞ்சு. காரியுண் டிக் கடவுள தியற்கையும் (மலைபடுகடாம்)
7. கரிய எருது. சுரிநெற்றிக் காரி (கலித்தொகை)
8. காரீயம்
9. வாசுதேவன். செங்கட்காரி (பரிபாடல்)
10. ஐயனார். (திவா.)
11. வயிரவன். (திவா.)
12. இந்திரன். காரி விருத்திர னைக் கொள்வினையும் (திருவாரூ. 18)
13. கடைவள்ளல்களுள் ஒருவன். கழ றொடித் தடக்கைக் காரியும் (சிறுபாணாற்றுப்படை)
14. காரிநாயனார். காரிக்குமடியேன் (தேவாரம்)
15. காரிவள்ளலின் குதிரை. காரிக்குதிரைக் காரியும் (சிறுபா.)
16. ஒரு நதி. காரியாற்றுக்கொண்ட (மணிமேகலை).