தேர்வு எழுதும் மாணவர்கள் கோப்பகப் படம்
செய்திகள்

+2 தேர்வு - கடந்த ஆண்டைவிட 0.47% கூடுதல் தேர்ச்சி!

Staff Writer

தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறையில் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலையில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

இந்த ஆண்டில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை- 7 இலட்சத்து 92 ஆயிரத்து 494 பேர்.

தேர்ச்சி பெற்றவர்கள்- 7, 53, 142 பேர். 

கடந்த ஆண்டில் மொத்தத் தேர்ச்சி- 94.56 சதவீதம் என்கிற நிலையில், அதைவிட 0.47 சதவீதம் அளவுக்கு இந்த ஆண்டு மாணவர்கள் கூடுதலாகத் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

மாணவிகள் 3.54% கூடுதல் தேர்ச்சி 

இந்த ஆண்டில் தேர்வு எழுதிய மொத்த பெண் மாணவர்கள்- 4,19,316 பேர்.

இவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள்- 4,05,472 பேர். 

தேர்ச்சி வீதம்- 96.07%

தேர்வு எழுதிய ஆண் மாணவர்கள்- 3,73,178 பேர்

தேர்ச்சி பெற்றவர்கள்- 3,47,670 பேர்

தேர்ச்சி வீதம்- 93.16%

ஆண் மாணவர்களைவிட பெண் மாணவர்கள் இந்த ஆண்டில் 3.54 சதவீதம் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.