செய்திகள்

05-02-2026 இரவு தலைப்புச் செய்திகள்

Staff Writer

* மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி உட்பட பல கட்சித் தலைவர்களையும் பேசவிடாமல் பிரதமர் பேசுவதா?- எதிர்க்கட்சியினர் அமளியால் பிரதமர் பதிலுரை இல்லாமல் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றித் தீர்மானம்.

* எனக்கு எதிர்க்கட்சியினர் சவக்குழி தோண்டப் பார்க்கிறார்கள் - மாநிலங்களவையில் பிரதமர் மோடி அதிர்ச்சிக் குற்றச்சாட்டு 

* மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசுகையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு; தங்கள் தரப்பைப் பேசவிடாமல் செய்வதாகக் குற்றச்சாட்டு.

* ரூ.34,237 கோடி ரூபாய்க்கான முதலீடு, 55,096 பேருக்கான வேலைவாய்ப்பு தரும் 15 முதலீட்டுத் திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை அனுமதி; சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர், ராமநாதபுரம், தூத்துக்குடி உட்பட்ட மாவட்டங்களில் புதிய திட்டங்கள் அமைக்கப்படும். 

* சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று பார்த்துவிட்டு, அவரின் குடும்பத்தாரிடம் நலம் விசாரித்தார்.

* மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கு: கொடூரக் காவலர்களை ஏவியவர்களை சி.பி.ஐ. தயக்கமின்றி கைது செய்ய வேண்டும்- பா.ம.க. தலைவர் அன்புமணி


* மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் தேர்வு எழுதும் ஸ்கிரைப் நியமனம் சம்பந்தமாக அரசு தேர்வுத்துறை இயக்குநரின் சுற்றறிக்கையை ரத்து செய்க - பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு சி.பி.எம். மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடிதம்