செய்திகள்

06-12-2025 காலை தலைப்புச்செய்திகள்

Staff Writer

* இலங்கைக்கு பத்தாயிரம் போர்வைகள்-துண்டுகள், 5 ஆயிரம் வேட்டி-சேலைகள், 950 டன் பருப்பு, சர்க்கரை, பால் மாவு உட்பட்ட நிவாரணப் பொருட்களைத் தமிழக அரசு வழங்குகிறது. சென்னை, தூத்துக்குடி துறைமுகங்கள் மூலம் இன்று மதியம் அனுப்பப்படுகின்றன.  

* இண்டிகோ விமான தாமதத்தால் ஒடிசாவில் திருமணம் முடித்த தம்பதியர், பெங்களூரில் நடைபெற்ற வரவேற்புக்கு வரமுடியாமல் காணொலியில் தோன்றிப் பேசி, வந்தவர்களிடம் ஆசி பெற்றனர்.  

* மத்திய அரசின் ஏகபோக மாடலுக்கு மக்கள் கொடுக்கும் விலைதான் இண்டிகோ விமான விவகாரம்- இராகுல்காந்தி குற்றச்சாட்டு 

* பணமோசடி வழக்கில் அனில் அம்பானியின் மேலும் ரூ.1,120 கோடி சொத்துகள் முடக்கம். முன்னதாக, வங்கி மோசடி வழக்கில் கடந்த ஆகஸ்ட்டில் ரூ.8997 கோடி சொத்துகள் முடக்கப்பட்டன.  

* பழனி உட்பட 48 கோயில்களின் வருமான விவரத்தை இணையத்தில் பதிவேற்றியே ஆகவேண்டும்; அறநிலையத்துறையின் கோரிக்கைக்கு மறுப்பு - நீதிபதிகள் சுரேஷ்குமார், சௌந்தர் அமர்வு கண்டிப்பான உத்தரவு 

* மேகதாது அணைத் திட்ட அறிக்கையைத் திருப்பி அனுப்பிவிடோம்-தஞ்சையில் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர் பேட்டி 

* அன்புமணியைத் தொடர்ந்து சௌமியா அன்புமணியும் பிரச்சாரப் பயணம். காஞ்சிபுரத்தில் இன்று தொடக்கம்.  

* ஒழுங்குமுறை விவகாரம்- எலான் மஸ்க்கின் ட்விட்டர் எக்ஸ் தள நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம் ரூ.1,250 கோடி அபராதம்