* சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் விஜய் பதிலுரைக்குப் பிறகு விவாதம் இல்லை - சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் திட்டவட்டம்
* முதலமைச்சர் விஜய் வீடு இருக்கும் பட்டினப்பாக்கம் பகுதியில் தலைமைச்செயலகம் அமைக்க 3 அரசுத் துறைகள் தங்கள் இடத்தை வழங்குவதற்கான அனுமதி நடைமுறைகளைத் தொடங்கியுள்ளன.
* திபெத் பகுதியில் வெள்ளத்தால் 43 பேர் உயிரிழந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 519 பேர் காணவில்லை என்று சீனத் தரப்பு அறிவிப்பு.
* உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த பத்மஸ்ரீ விருதாளர் டாக்டர் டி.கே.லாகிரி அங்குள்ள பேராசிரியரால் தாக்கப்பட்டதில் காயமடைந்தார்.
* பரந்தூரை விட்டுவிட்டு இப்போது செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் விமானநிலையம் அமைக்க பரிந்துரை அனுப்புகிறது, த.வெ.க. அரசு. அங்குள்ள விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்களா? யாரை ஏமாற்றுகிறார்கள்? - தே.மு.தி.க. இளைஞர் அணிச் செயலாளர் விஜய பிரபாகரன்
* நேபாளப் பேரழிவுப் பெருவெள்ளத்தைத் தொடர்ந்து அளவிடமுடியாதபடியான பேரிடர்கள் மீண்டும் அந்நாட்டைத் தாக்கும் என்றும் அசாம், உத்தரகண்ட், கேரளம் ஆகிய மாநிலங்களையும் தாக்கும் என்றும் சூழலியல் வல்லுநர்கள் எச்சரிக்கை.
* அமெரிக்காவின் மியாமி நகரில் அமேசான் சரக்கு விமானம் தரையிறங்கியபோது ஓடுபாதையைத் தாண்டிச் சென்று விபத்துக்கு உள்ளானதில் 5 பேர் உயிரிழப்பு; 5 பேர் காயம்.