பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 
செய்திகள்

10ஆம் வகுப்பு துணைத்தேர்வு அறிவிப்பு - எந்த நாள் என்ன பாடம்?

Staff Writer

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், தேர்வை எழுதாத மாணவர்களுக்கு வரும் ஜூலை 4ஆம் தேதி துணைத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதைத் தொடர்ந்து, இன்று மாலையில் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

ஜூலை 4ஆம் தேதியன்று தமிழ், மற்ற மொழிப் பாடத் தேர்வுகள் நடைபெறும். 

அடுத்ததாக, விருப்ப மொழிப் பாடத்துக்கான தேர்வு மறுநாள் நடத்தப்படுகிறது. 

7ஆம் தேதி ஆங்கிலம், 8ஆம் தேதி கணிதம், 9ஆம் தேதி அறிவியல், 10ஆம் தேதி சமூக அறிவியல் பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.