இலங்கையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்புச் சீர்த்திருத்தங்களால், இலங்கை தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புகுந்து ரவுடியை வெட்டிக்கொலை செய்த ஹெல்மட் கும்பல்; தலைநகரில் பரபரப்பு சம்பவம்!
அகில இந்திய அளவில் நடைபெறும் ஏகலைவா பள்ளிகளில், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணிகளுக்கான தேர்வு எழுதுவதில், தமிழ்ப் புறக்கணிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது; இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எழுத முடியும் என்பதை ஏற்கவே முடியாது. என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கண்டித்துள்ளார்.
ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், 23.01.2026 வெள்ளிக் கிழமை காலை 10 மணி அளவில், தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெறும் என வைகோ தகவல்.
தென்காசி மாவட்டம் கடையம் உட்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடற்ற வகையில் நடைபெற்று வரும் கனிமக் கொள்ளையை தடுக்க முடியாததாலும், அதன் தீமைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு புகார் மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படாததாலும் திமுகவின் நெல்லை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் துணை அமைப்பாளர் கடையம் சந்திரசேகர் அடிப்படை உறுப்பினர் உட்பட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகியுள்ளார்; சுயமரியாதையைக் காக்க இந்த முடிவை அவர் எடுத்திருப்பது மிகவும் சரியானது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.