விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள படைத்தலைவன் வெளியீட்டு அறிவிப்பு மீண்டும் வந்துள்ளது. வரும் 13ஆம் தேதி இந்தப் படம் வெளியிடப்படும் என படக் குழு அறிவித்துள்ளது.
முன்னதாக, ஆறு மாதங்களுக்கு முன்னர் பொங்கல் அன்று இந்தப் படம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி பொங்கலுக்கு படத்தை வெளியிட முடியவில்லை.
அதையடுத்து, கடந்த மாதம் படம் வெளியாகும் எனக் கூறப்பட்டிருந்தது. அதன்படியும் படைத்தலைவன் படம் வெளியாகவில்லை.
மூன்றாவது முறையாக இப்போது அறிவித்திருக்கிறார்கள். திரைக்கு வருமா என எதிர்பார்ப்பைக் கிளப்பிவிட்டிருக்கிறது.
இசைஞானி இளையராஜாவின் இசையில் யு. அன்பு இப்படத்தை இயக்கியுள்ளார்.