கடலூர் அருகில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 15 பயணிகள் காயம் அடைந்தனர். நல்வாய்ப்பாக பெரும் பாதிப்பு எதுவும் இல்லை.
சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கு நேற்று இரவு புறப்பட்ட அரசுப் பேருந்து இன்று அதிகாலையில் கடலூர் அருகே ஆலப்பாக்கம் பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அப்போது குள்ளஞ்சாவடி சாலையில் திரும்பிக்கொண்டிருந்த தனியார் பேருந்தும் அரசுப் பேருந்தும் மோதிக்கொண்டன.
அரசு விரைவுப் பேருந்து பக்கவாட்டில் உள்ள வயல்வெளியில் இறங்கியது.
இந்த விபத்தில் பதினைந்து பயணிகள் காயம் அடைந்தனர்.
சம்பவத்தைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாகக் களத்தில் இறங்கி காயம்பட்டவர்களை, அவசர ஊர்திகளுக்குச் சொல்லி கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
நல்வாய்ப்பாக யாருக்கும் அசாதாரணமாக எதுவும் நிகழ்ந்துவிடவில்லை.