செய்திகள்

16-12-2025 காலை தலைப்புச்செய்திகள்

Staff Writer

100 நாள் வேலைத் திட்டத்தில் காந்தியடிகள் பெயர் நீக்கம்; நிதியும் குறைப்பு- புதிய மசோதா

நவோதயா பள்ளிகளுக்கு மாவட்டம்தோறும் நிலம் கண்டறிய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பிரதமர் மோடி 3 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம்; ஜோர்டானுக்குச் சென்றார்.

பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை அமித்ஷாவிடம் வழங்கவில்லை- நயினார் நாகேந்திரன்

தூத்துக்குடியில் அசாம் மாநில இளம்பெண் கணவர் முன்னால் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒப்பந்தகாரன், 2 சிறுவர்கள் கைது. 

கேரளத்தில் திருப்பம்- திருவனந்தபுரம் மேயர் பதவியைக் கைப்பற்ற காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் உடன்பாடு

ஐஐடி,ஐஐஎம், அனைத்து மையப் பல்கலைக்கழகங்களையும் ஒரே உயர்கல்வி ஆணையத்தின் கீழ் கொண்டுவர புதிய சட்டவரைவு அறிமுகம் 

குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல் பயன்படுத்தத் தடை- உயர்நீதிமன்றத்தில் வழக்கு முடித்துவைப்பு

மைய சென்னை எம்.பி. தயாநிதி மாறனின் வெற்றியை எதிர்த்த வழக்கு- உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. 

அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை- குற்றவாளி ஞானசேகரன் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை இரத்து 

பெண் உதவி ஆய்வாளர் தற்கொலை- மீஞ்சூர் உதவி ஆய்வாளர் பணி இடைநீக்கம்