1. பா.ஜ.க. மேலிடத் தேர்தல் பொறுப்பாளர் மைய அமைச்சர் பியூஷ் கோயலின் இன்றைய தமிழக வருகையும் இரத்து.
2. தமிழ்நாட்டில் 5 முனைப் போட்டி. இராமதாசும் சசிகலாவும் இணைந்து தைலாபுரத்தில் புதுக் கூட்டணியை அறிவித்தனர்.
3. வேட்பாளர்கள் தங்கள் சமூக ஊடகக் கணக்கு விவரங்களை ஒப்படைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு. முன் அனுமதி பெறாமல் விளம்பரங்களை வெளியிடவும் தடை.
4. எரிவாயுத் தட்டுப்பாட்டை அடுத்த அதிர்ச்சி, பிரிமியம் வகை பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு.
5. எங்கள் கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்பு இல்லை; விஜய் கட்சியுடன் நாங்கள் பேசவே இல்லை : எடப்பாடி பழனிசாமி சொல்கிறார்
6. மேற்கு ஆசியப் பிரச்னையில் ஒரே நாளில் 5 நாடுகளின் தலைவர்களுடன் பேசினார், பிரதமர் மோடி.