செய்திகள்

21-10-2025 காலை 7 மணி தலைப்புச்செய்திகள்

Staff Writer

சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பியவர்களுக்காக அரசு அலுவலகங்கள், பொத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை. 

பீகாரில் 2ஆம் கட்டத் தேர்தலுக்கான மனுத்தாக்கல் நிறைவு. 243 இல் 143 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது இராஷ்டிரிய ஜனதா தளம். அதே கூட்டணியில் 60 வேட்பாளர்களை மட்டுமே அறிவித்த காங்கிரஸ்!

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 20ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருந்த நிலையில், இன்று காலையில் நீர்வரத்து வினாடிக்கு 24ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

தீபாவளி விடுமுறைக்குப் பின்னர் இயக்கப்படுவதாக இருந்த 6 சிறப்பு இரயில் சேவைகள் நிறுத்தம். முன்பதிவு குறைவாக இருந்ததால் இரத்து எனத் தகவல்.

நடப்பாண்டில் 7ஆவது முறையாக முழுக் கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை. இன்று காலை நிலவரப்படி அணையிலிருந்து 30,500 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.  

இரவி அரசு இயக்கத்தில் அறிவிக்கப்பட்ட மகுடம் திரைப்படத்தை, தானே இயக்கப்போவதாக அப்படத்தின் நாயகன் விஷால் அறிவித்துள்ளார்.