செய்திகள்

26-03-2026 மாலை தலைப்புச்செய்திகள்!

Staff Writer

* த.வெ.க. தலைவர் விஜய் 28ஆம் தேதி அன்று சென்னையில் பெரம்பூர், கொளத்தூர் உட்பட 5 இடங்களில் பிரச்சாரம்.

* புதுச்சேரியில் மு.க.ஸ்டாலின் கூறியபிறகும் காங்கிரஸ் தொகுதிகளை ஒதுக்க மறுத்துவிட்டது; இதனால் வலுவாக இருந்த கூட்டணி தளர்ந்துவிட்டது- மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே. பாலகிருஷ்ணன் விமர்சனம்

* மேற்கு ஆசியப் போர் காரணமாக 90 சதவீத ஏற்றுமதி முட்டைகள் தேக்கம் அடைந்திருக்கிறது; முட்டை கொள்முதல் விலை 3.85 ரூபாயாகக் குறைந்தது.

* தஞ்சை, பின்னையூரைச் சேர்ந்த அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி என்பவர், சில நாள்களுக்கு முன்னர் த.வெ.க. சார்பில் நடத்தப்பட்ட மகளிர் தினத்தில் நடனமாடிய வீடியோ பரவியநிலையில், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

* மாநிலங்களவையில் ஓர் இடம்+ 15 சட்டமன்றத் தொகுதிகள் கேட்டு அது 5 தொகுதிகள் எனக் குறைந்து, அ.தி.மு.க. அணியில் பின்னர் பேச்சே இல்லாத நிலையில், தனித்துப் போட்டியிடுவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவிப்பு.