தலைப்புச்செய்திகள் 
செய்திகள்

29-10-2026 காலை தலைப்புச் செய்திகள்

Staff Writer

1. ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நேற்று 200 கி.மீ. வேகத்தில் சென்ற அதிவேக இரயில் வண்டி நின்றுகொண்டிருந்த இன்னொரு இரயில்வண்டியுடன் மோதியதில் 68 பேர் உயிரிழப்பு!

2. உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி; நவ.1 முதல் வடதமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு.  

3. ஆந்திரப் பிரதேசத்தில் அர்னாப் புயலால் 5 பேர் உயிரிழப்பு.

4. 19 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பதவி, இட மாற்றம். 

5. முதல்வர் விஜய்யைப் பற்றிப் பேசிய தி.மு.க. கவுன்சிலரைச் சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு.

6. பிரபல பொருளாதார வல்லுநர் கலையரசனை அதிகாலையில் கைதுசெய்த போலீஸ். அவர் பெயரில் போலி இன்ஸ்டா மூலம் தவறான செய்திகள் பரப்பியது தெரியவந்தது. ஆனாலும் அவரிடம் எழுதிவாங்கியபின் வெளியே விட்டது போலீஸ். 

7. தேனி மாவட்டச் சிறையிலிருந்து தப்பிய 15 பேரில் மீதமிருந்த 2 பேரும் போலீசில் சரண்.