வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்யும்முன் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் பன்னீர்செல்வம் மலர் மரியாதை  
செய்திகள்

4 ஆண்டுகளில் 1.51 கோடி ஏக்கராக சாகுபடிப் பரப்பு உயர்வு!

Staff Writer

தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்த சாகுபடிப் பரப்பு 1.51 கோடி ஏக்கராக அதிகரித்துள்ளது. 

சட்டப்பேரவையில் இன்று வேளாண்மை நிதிநிலை அறிக்கை முன்வைக்கப்பட்டது. அதை வாசித்த துறை அமைச்சர் பன்னீர்செல்வம் இதைத் தெரிவித்தார். 

கடந்த 2019-20ஆம் ஆண்டில் 146 இலட்சத்து 77 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. இது படிப்படியாக உயர்ந்து 2023-24ஆம் நிதியாண்டில் 151 இலட்சம் ஏக்கராக அதிகரித்தது என வேளாண் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

மேலும், 2019-20 ஆம் ஆண்டில் 29 இலட்சத்து 74 ஆயிரம் ஏக்கராக இருந்த இருபோக சாகுபடிப் பரப்பு, 2023-2024 ஆம் ஆண்டில் 33 இலட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் என்ற அளவை எட்டியுள்ளது.

முன்னதாக, நிதிநிலை அறிக்கையை அவைக்கு முன்வைக்கும் முன்னர் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்ற அமைச்சர் பன்னீர்செல்வம் மலர் மரியாதை செலுத்தினார்.