தங்கம் விலை (மாதிரிப்படம்) 
செய்திகள்

40 ரூ. கூடியிருந்தால் சவரன் தங்கம் ரூ.62 ஆயிரம்!

Staff Writer

நாடுகளுக்கு இடையே கடுமையான பொருளாதார நெருக்கடி போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், தங்கத்தின் விலை மீண்டும் ஏறுமுகமாக இருந்துவருகிறது. 

திருவிழா காலம் தொடர்ந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் 59 ஆயிரம் ரூபாயைத் தொட்ட சவரன் தங்கத்தின் விலை, அதையடுத்தும் ஏற்றமாகவே இருந்துவருகிறது. 

இன்றைக்கு சென்னை, தங்க சந்தையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 61 ஆயிரத்து 960 ரூபாயாக அதிகரித்துள்ளது. 

முன்னதாக, நேற்று சவரன் தங்கம் 61, 840 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 

அது, முந்தைய நாளைவிட 960 ரூபாய் கூடுதல் ஆகும். 

இன்றைய சந்தையில் ஒரு கிராம்அணிகலன்  தங்கம் 7, 745 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.