தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆறு பேரின் பதவிக்காலம் முடிவடைவதால், அந்த காலியிடங்களுக்கு அடுத்த மாதம் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் அன்புமணி, தி.மு.க.வின் தொழிற்சங்கத் தலைவர் சண்முகம், மூத்த வழக்குரைஞர் வில்சன், புதுக்கோட்டை அப்துல்லா, அ.தி.மு.க.வின் சந்திரசேகர் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
எனவே, அந்த இடங்களுக்கான தேர்தலை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அடுத்த மாதம் 19ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.