மத்திய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து மாநிலம் முழுவதும் வரும் 8ஆம் தேதி கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என தி.மு.க. அறிவித்துள்ளது.
ஓரவஞ்சனையான நிதிப் பகிர்வு, ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட உச்சரிக்காதது என நிதிநிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த மோடி அரசைக் கண்டித்து வருகிற பிப்ரவரி 8, சனிக்கிழமை, மாலை தமிழ்நாடு முழுவதும் கட்சியின் அனைத்து மாவட்ட அமைப்புகளின் சார்பிலும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, நாளை 4ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.