செய்திகள்

‘பெருமையான தருணம்’ – கார் ரேஸ்ஸில் 2ஆம் இடம் பிடித்த அஜித்துக்கு குவியும் பாராட்டுகள்!

Staff Writer

கார் பந்தயத்தில் வென்றதைக் கொண்டாடும் அஜித்தின் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பலரும் அஜித்துக்கு வாழ்த்துக்களைத் தெரிவித் து வருகின்றன.

திரைப்படங்களில் நடித்துக்கொண்டே கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் அஜித் குமார். அந்தவகையில் சமீபத்தில் துபாயில் நடந்த 24H ரேஸில் அஜித் குமாரின் ரேஸிங் அணி 922 போர்ஷே பிரிவில் மூன்றாம் இடத்தைப் பிடித்திருந்தது.

இதனைத்தொடர்ந்து அஜித் குமாரின் ரேஸிங் அணி பெல்ஜியம் நாட்டில் ஸ்பா ஃபிரான்கோர்சாம்ஸ் என்ற பந்தயத்தில் பங்கேற்றது. இந்த பந்தயத்தில் அஜித் குமாரின் அணி இரண்டாம் இடம் பிடித்து சாதனைப் படைத்திருக்கிறது.

இதுகுறித்து அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தளப் பக்கத்தில், "இந்திய மோட்டார் விளையாட்டுக்கு ஒரு பெருமையான தருணம். பெல்ஜியத்தில் ஸ்பா ஃபிரான்கோர்சாம்ஸ் பந்தயத்தில் அஜித்குமார் மற்றும் அவரது குழுவினர் குறிப்பிடத்தக்க P2 Podium Finish செய்தனர். உலகளாவிய பந்தய அரங்கில் ஆர்வம், விடாமுயற்சிக்கு இது ஒரு சான்று” என்று பதிவிட்டுள்ளார்.