நடிகர் அருள் தாஸ் - இயக்குநர் மிஷ்கின் 
செய்திகள்

‘நாகரீகமாக பேசுங்கள்…’ மிஷ்கினை கிழித்துத் தொங்கவிட்ட அருள் தாஸ்!

Staff Writer

“இயக்குநர் மிஷ்கின் இனி மேடையில் பேசும்போது நாகரீகமாக பேச வேண்டும்” என நடிகர் அருள் தாஸ் கடுமையாக கண்டித்து பேசியுள்ளார்.

சமீபத்தில் பாட்டல் ராதா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெற்றிமாறன், அமீர் மற்றும் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் இயக்குநர் மிஷ்கின் மேடையில் பேசும்போது கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு நடிகர் அருள்தாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

2கே லவ் ஸ்டோரி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் அருள்தாஸ், “மேடையில் எப்படி பேச வேண்டும் என மிஷ்கின் தெரிந்துகொள்ள வேண்டும். பல புத்தகங்களைப் படித்து உலக சினிமாக்களை பார்த்தால் மட்டும் போதாது. நாகரீகம் தெரிய வேண்டும். இளையராஜா, பாலா போன்ற வயதில் மூத்த சாதனையாளர்களை அவன், இவன் என ஒருமையில் பேசுகிறார். முதலில் நீ யார்? பெரிய அறிவாளியா? உலக சினிமாவிலிருந்து காட்சிகளை நகல் செய்யும் போலியான அறிவாளி. இனி மேடையில் பேசும்போது நாகரீகமாக பேசுங்கள்.” எனக் கடுமையாக தன் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். இவரின் பேச்சை தயாரிப்பாளர் தனஞ்செயன் அதேமேடையில் பாராட்டி வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.