குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து மதியம் 1:17 மணியளவில் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில நொடிகளிலேயே திடீரென விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 ரக விமானம், விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மெஹானி என்கிற குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. பயணிகளின் நிலை குறித்தும், விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
விபத்துக்குள்ளான இடத்தில் வானுயர கரும்புகை சூழ்ந்திருக்கும் நிலையில் மீட்பு நடவடிக்கைகள் தொடங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. மீட்கப்பட்டவர்கள் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது சம்பந்தமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத்தின் முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.