தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ‘யார் அந்த சார்?’ என்ற பேட்ஜை அணிந்து வந்து கவனத்தை ஈர்த்துள்ளனர்.
ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த பிரதான எதிர்க்கட்சியான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது சட்டைகளில் 'யார் அந்த சார்?' என்ற பேட்ஜை அணிந்து வந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்பட 66 எம் எல் ஏ.க்களும் 'யார் அந்த சார்?' என்ற பேட்ஜ் பொருந்திய சட்டையை அணிந்து வந்தனர். பேரவைக்குள் சென்றதும் அவர்கள் அந்த பேட்ஜை அணிந்து கொண்டனர். மேலும், அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து விவாதிக்க அதிமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது சட்டைகளில் யார் அந்த சார்? என்ற பேட்ஜை அணிந்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.