அதிமுக தலைமை அலுவலகம் 
செய்திகள்

மே -2 இல் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம்!

Staff Writer

அதிமுக செயற்குழு மே 2ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பாஜகவுடன் மீண்டும் அதிமுக ஏன் கூட்டணி வைக்க நேர்ந்தது என்பதை நிர்வாகிகள் மத்தியிலும் செயற்குழு உறுப்பினர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி விளக்கவுள்ளார்.

அதிமுகவில் பாஜக கூட்டணிக்கு மூத்த நிர்வாகிகள் மத்தியிலேயே அதிருப்தி நிலவி வரும் நிலையில், இந்த கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.