நடிகர் அஜித்குமார் 
செய்திகள்

அஜித் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு காத்திருக்கும் பரிசு!

Staff Writer

நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாளையொட்டி, வீரம் திரைப்படத்தை மீண்டும் வெளியிடவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை ரூ. 250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

கோடை விடுமுறை என்பதால் தொடர்ந்து திரையரங்கில் குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு கூட்டம் அலைமோதுகின்றது.

இந்த நிலையில், மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாளையொட்டி வீரம் திரைப்படத்தை மறுவெளியீடு செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்த படத்தில் இருந்து ’ரத கஜ’ பாடலை யூடியூபில் நேற்று மறுவெளியீடு செய்துள்ளனர்.

சிவா இயக்கத்தில் அஜித்துடன் தமன்னா, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் 2014 பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வீரம் திரைப்படம் பெற்றது.

கடந்த வாரம் சச்சின் திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டு ரூ. 10 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.