அஜித் குமார் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருந்த விடாமுயற்சி படம் தற்போது பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இம்முறை கண்டிப்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் மகிழ் திருமேனி படத்தை பற்றியும் அஜித்தை பற்றியும் பல விஷயங்களை பேசி வருகின்றார். அப்படி, விடாமுயற்சி திரைப்படத்தை பார்த்த அஜித், ‘படம் இந்தளவிற்கு சிறப்பா வரும்னு நினைக்கவில்லை’ என்றாராம். மேலும் மகிழ் திருமேனியையும் அஜித் வெகுவாக பாராட்டினாராம். இவ்வாறு மகிழ் திருமேனி ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
விடாமுயற்சி திரைப்படம் ஹாலிவுட் படமான பிரேக்டவுன் என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து இப்படம் அஜித்தின் வழக்கமான படங்களை போல இல்லாமல் சற்று வித்தியாசமான ஒரு படமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த வித ஹீரோயிசமும் இன்றி உருவான ஒரு படமாக விடாமுயற்சி இருக்கும். மாஸ் மற்றும் பன்ச் வசனங்கள், ஹீரோ பில்ட் அப் காட்சிகள் போன்ற விஷயங்கள் விடாமுயற்சி திரைப்படத்தில் இருக்காது என மகிழ் திருமேனி கூறியுள்ளார். இதன் மூலம் விடாமுயற்சி திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கு வித்தியாசமான ஒரு அனுபவத்தைக் கொடுக்கும் என்றே தெரிகின்றது. குறிப்பாக அஜித்தின் நடிப்பிற்காகவே விடாமுயற்சி திரைப்படத்தை திரும்ப திரும்ப பார்க்கலாம் என இயக்குநர் மகிழ் திருமேனி அடித்து கூறியிருக்கின்றார்.
அஜித்தின் நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், தற்போது விடாமுயற்சி வெளிவர இருக்கிறது.