“பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என த.வெ.க. அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.” என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் நிச்சயம் கூட்டணி கிடையாது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு துணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் கூறி இருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என த.வெ.க. அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை. த.வெ.க. தலைவர் விஜய்தான். பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என இதுவரை கூறவில்லை. பிறர் கூறுவதற்குப் பதில் சொல்ல முடியாது. தி.மு.க.வுக்கு எதிராக எல்லோருமே ஒன்று சேர வேண்டிய சூழல் நமக்கு வந்திருக்கிறது. தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும் என எண்ணுபவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.