மூன்று மொழிக் கொள்கைக்கு ஆதரவாக தமிழக பா.ஜ.க. சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக சென்னை, காரம்பாக்கத்தில் அரசுப் பள்ளி ஒன்றின் முன்பாக பா.ஜ.க.வினர் மாணவர்களுக்கு பிஸ்கட் வழங்கினர். அத்துடன் கையோடு அவர்களை அங்கு மாட்டியிருந்த பேனரில் கையெழுத்திடுமாறும் ஒரு பெண்ணும் மற்ற ஆண் நிர்வாகிகளும் வற்புறுத்தி ஒப்பமிடச் செய்தனர்.
பிஸ்கட் வாங்கிய சிறுவர்களிடம் பேனரிலும் ஒரு பெரிய புத்தகப் பேரேட்டிலும் கையெழுத்து வாங்கிக்கொண்ட பிறகே அனுப்பினர்.
பா.ஜ.க.வின் இந்தச் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.