விஜய் ரூபானி 
செய்திகள்

விமான விபத்தில் உயிரிழந்த விஜய் ரூபானி உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

Staff Writer

அகமதாபாத் விமான விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது.

விபத்தில் மீட்கப்பட்ட விஜய் ரூபானியின் உடல் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. ரூபானியின் டிஎன்ஏ மாதிரிகள் ஞாயிற்றுக்கிழமை காலை 11.10 மணிக்கு பொருந்தியது. இதையடுத்து அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ரூபானியின் இறுதிச் சடங்கு ராஜ்கோட்டில் நடைபெறும் என்றும் அதற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டு வருவதாகவும் குஜராத் சுகாதார அமைச்சர் ரிஷிகேஷ் படேல் தெரிவித்தார்.

இதற்கிடையில், டிஎன்ஏ சோதனை மூலம் இதுவரை 32 பாதிக்கப்பட்டவர்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

மேலும் 14 பேரின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.