அணிகலன் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு இன்று ஒரு இலட்சத்து 4 ஆயிரம் ரூபாயைத் தொட்டது. இது தங்கத்தின் விலையில் புதிய உச்சமாகும்.
ஒரு கிராம் தங்கத்தின் விலை 13 ஆயிரம் ரூபாயாக புதிய உச்சத்தைத் தொட்டது.
இதைப் போல வெள்ளியின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்துள்ளது.
ஒரு கி.கி. வெள்ளியின் விலை ஒரே நாளில் 20 ஆயிரம் ரூபாய் உயர்ந்து இன்று 2.74 இலட்சமாக அதிகரித்தது.
உலக அளவில் தங்கத்துக்கு அடுத்து வெள்ளியில் அதிகமானோர் முதலீடு செய்துவருவது சில வாரங்களாகத் தொடர்ந்துவருகிறது.
தங்கம், வெள்ளியை அடுத்து தாமிரத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது என சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.