Personal
வணிகம்

ஈரான்  போர் நிற்காவிட்டால்…. அது நடந்தே தீரும்...  பீதியைக் கிளப்புறாரே இவரு...  

Staff Writer

நாளைக்கே ஈரான் போர் நிற்கவேண்டும் இல்லையென்றால் சர்வதேசப் பொருளாதாரம் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகும் என கோடக் மஹிந்திரா வங்கியின் நிறுவனரும் இயக்குநருமான உதய் கோடக் கூறியுள்ளார்.

வர இருக்கும் நிதிநிலை நெருக்கடியை மனதில் கொண்டு தொழில்நிறுவனங்களும் கொள்கை வகுப்பாளர்களும் நெருக்கடி சமாளிப்பு முறைகளைக் கடைபிடிக்க தயாராக வேண்டும் என அவர் அறிவுறுத்தி உள்ளார்.

’இருமாதங்களாக போர் நடந்தாலும் நாம் அதன் பாதிப்பை உணரவில்லை. ஆனால் பாதிப்பு வருகிறது.. மிகப்பெரிதாக வருகிறது. நாளையே ஈரான் போர் நின்றாலொழிய அதன் பாதிப்பிலிருந்து நாம் தப்ப முடியாது,” என்று சிஐஐ அமைப்பின் வருடாந்திர மாநாட்டில்(2026) அவர் கூறி இருக்கிறார்.

கடந்த இரு நாட்களாக பிரதமர் மோடி நாட்டு மக்களை போர்க்கால அடிப்படையில் எரிபொருள் சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டும் எனக் கூறிவரும் நிலையில் உதய் கோடக் இப்படிக் கூறியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.