அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் நாடுகளில் இந்தியா 
வணிகம்

நேரடி அந்நிய முதலீடு- 44 சதவீதம் அதிகரிப்பு!

Staff Writer

வெளிநாடுகளின் நேரடி அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் இந்தியா முன்னிலையில் இடம்பெற்றுள்ளதுடன், கடந்த ஆண்டைவிட முன்னேற்றியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 2026ஆம் ஆண்டிற்கான உலக முதலீட்டு அறிக்கையில், 2025ஆம் ஆண்டில் இந்தியாவுக்குள் வந்த அந்நிய நேரடி முதலீடுகள் 44% உயர்ந்து, 39 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

இதன் மூலம், உலகின் அதிக அந்நிய முதலீட்டை ஈர்க்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 13-வது இடத்திலிருந்து 11-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

மின்னணு உற்பத்தி, வாகனத் தொழில், செமி கண்டக்டர், தொழில் துறை உற்பத்தி உட்பட்ட துறைகளில் முதலீடுகள் அதிகரித்ததே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

'மேக் இன் இந்தியா', 'ஸ்டார்ட் அப் இந்தியா', 'உற்பத்தி இணைப்பு ஊக்கத்திட்டம்' போன்ற அரசின் முயற்சிகளும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக உலக முதலீட்டு அறிக்கை குறிப்பிடுகிறது.

இருப்பினும், புதிய திட்டங்களுக்கான முதலீட்டு அறிவிப்புகள் தற்போது குறைந்து வருவதால், வரும் காலங்களில் முதலீட்டை அதிகரிக்கும் முயற்சிகளை இந்தியா தொடர வேண்டும் என்று அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram