மத்திய அரசுக்கு 2.7 கோடி ரூபாய் நிதியை ஈவுத் தொகையாக இந்திய ரிசர்வ் வங்கி வழங்குகிறது. இந்த தொகை 2024-25 நிதி ஆண்டுக்கு கொடுக்கப்படுகிறது. கடந்த 2023-24 நிதி ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 27.4 சதவீதம் அதிகம்.
ரிசர்வ் வங்கியின் தலைவர் சஞ்சய் மல்கோத்ரா தலைமையில் இயக்குநர்கள் வாரியத்தின் 616 ஆவது கூட்டம் மும்பையில் நடைபெற்றது. அதில் உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதார சூழ்நிலையை ஆராய்ச்சி செய்ததன் அடிப்படையில் எதிர்கால அபாயங்களை மனதில் கொண்டு. மத்திய அரசுக்கு ஈவுத்தொகையாக ரூ.2,68,590.07 கோடி கொடுப்பதாக ரிசர்வ் வங்கி. அறிவித்துள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கி தன் இருப்பில் இருக்கும் டாலர்களை விற்பது, பிறவங்கிகளுக்கு கடன் கொடுத்து வட்டி ஈட்டுவது, வெளிநாட்டில் இருக்கும் சொத்துகள் மூலம் பொருளீட்டுவது ஆகிய வழிகளில் லாபம் ஈட்டுகிறது. இந்த லாபத்தில் இருந்து ஒரு தொகையை மத்திய அரசுக்கு ஈவுத்தொகையாக வழங்கும். தன்னிடம் இருக்கும் அவசரகால நிதியை ஓராண்டுக்கு முந்தைய அளவான 6.5 லிருந்து 7.5% ஆக உயர்த்தி இருப்பதன்மூலம், தனக்குக் கிடைத்த லாபத்தில் ஒரு பகுதியை ரிசர்வ் வங்கி தன்னிடமே வைத்துக்கொள்ள முடிவு செய்திருப்பதும் புலனாகிறது.