தங்கத்தின் விலை 
வணிகம்

தலையே சுற்றும் தங்கம் விலை.. வரலாறு காணாத உச்சம்..!

Staff Writer

ஒரேநாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,120 அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தங்கம் விலை கடந்த மாதம் 15ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது. அதன் பின்னர் விலை குறைந்த நிலையில், அதே மாதம் 22ஆம் தேதியில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் பயணித்தது. கடந்த மாதம் 28ஆம் தேதி புதிய உச்சத்தை தொட்டு, பிறகு விறுவிறுவென இறங்கியது. அப்படியாக விலை குறைந்து வந்து, கடந்த ஒரு வாரமாக மீண்டும் ஏற்றத்திலேயே தங்கம் விலை இருந்து வருகிறது.

அந்த வரிசையில் நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.450-ம், சவரனுக்கு ரூ.3,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கும் விற்கப்பட்டது. இதன் மூலம் தங்கம் இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.730-ம், சவரனுக்கு ரூ.5,840-ம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று 2-வது முறையாக மீண்டும் உயர்ந்த தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,15,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.515 அதிகரித்து. ஒரு கிராம் ரூ.14,415-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

முன்னதாக இன்று காலை சவரனுக்கு ரூ. 2,800 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,14,000 -க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் ஒரேநாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,120 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை

வெள்ளி விலை தற்போது கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.345-க்கும், கிலோவுக்கு ரூ. 5,000 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.3,45,000-க்கும் விற்பனையாகி வருகிறது.

தங்கம், வெள்ளி விலைகளில் ஏற்பட்டுள்ள புதிய உச்சம் இல்லத்தரசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.