தங்கத்தின் விலை 
வணிகம்

இன்றும் 2 முறை கூடிய தங்கத்தின் விலை- சவரன் ரூ.1,24,400

Staff Writer

அணிகலன் தங்கத்தின் விலை இன்று காலையில் ஒரு முறையும் மதியவாக்கில் இரண்டாவது முறையும் ஏற்றம் கண்டது. 

காலையில் ஒரு கிராம் தங்கத்தின் விலையில் ரூ.2,400 உயர்ந்தது. அதையடுத்து மீண்டும் ஒரே நாளில் இரண்டாவது முறையாக ஒரு கிராமுக்கு 2,800 ரூபாய் அதிகரித்தது. இதனால் ஒரே நாளில் 5,200 ரூபாய் விலை உயர்வை தங்கம் எதிர்கொண்டது.

இன்றைய விலையேற்றத்துக்குப் பின்னர் ஒரு சவரன் அணிகலன் தங்கத்தின் விலை ரூ.1,24,400 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, ஈரான் மீது அமெரிக்கப் படை தாக்குதலும் பதிலுக்கு ஈரானின் தாக்குதலும் சேர்ந்துகொள்ள தங்கத்தின் விலையில் உலக அளவிலும் ஏறுமுகமே தொடரும் என்பது உறுதியாகியுள்ளது.