எரிபொருள் விலை உயர்வு காரணமாக உள்நாட்டு, பன்னாட்டு விமானக் கட்டணங்களை உயர்த்துவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு நாளை 6ஆம் தேதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது.
குறைந்தபட்சம் 500 கி.மீ. வரையிலான பயணங்களுக்கு 375 ரூபாய் எரிபொருள் கட்டணமாக வசூலிக்கப்படும்.
அதற்கடுத்து, 501 முதல் ஆயிரம் கி.மீ. வரை 600 ரூபாயும், 1501 கி.மீ. முதல் 2 ஆயிரம் கி.மீ.வரை 1150 ரூபாயும், 2 ஆயிரம் கி.மீ.க்கு மேல் கூடுதல் கட்டணமாக ரூ.1,300 வசூலிக்கப்படும்.
அதிகபட்சம் ஐரோப்பிய நாடுகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.