நடிகர் அஜித்குமார் 
செய்திகள்

கார் பந்தயம்: தமிழ்நாடு அரசுக்கு நடிகர் அஜித் பாராட்டு!

Staff Writer

சென்னையில் கார் பந்தயம் நடத்திய தமிழ்நாடு அரசுக்கு நடிகர் அஜித் குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், சென்னையில் முதல்முறையாக ஸ்ட்ரீட் ரேசிங் நடைபெற்றது. அதுவும் இரவுநேர போட்டியாக நடந்தது.

இதனை சாத்தியப்படுத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி. இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கு மிகப்பெரிய ஊக்கமாக அது இருந்தது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மோட்டார் ஸ்போர்ட்ஸ்க்கு நிறைய நல்ல விஷயங்களை செய்து வருகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

துபையில் அண்மையில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தய போட்டியில் நடிகர் அஜித்குமார் தன்னுடைய அணியினருடன் பங்கேற்றார்.

அதில் ஒரு பிரிவில் அஜித் குமாரின் அணி மூன்றாவது இடம் பிடித்து சாதனைப் படைத்தது. இதைத்தொடர்ந்து அஜித் குமருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்தன.

பின்னர் அவர், தனது கார் பந்தயப் போட்டிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.