நீட் எழுதவிருந்த மாணவி தர்சினி தற்கொலை 
செய்திகள்

நீட் துயரம்- மாணவி சென்னையில் தற்கொலை!

Staff Writer

அடுத்த வாரம் நீட் தேர்வு எழுதவிருந்த மாணவி ஒருவர், தன்னை மாய்த்துக்கொண்ட துயரம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. 

சென்னை, கிளாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தர்சினி கடந்த 2021ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு எழுதப் பயிற்சி பெற்றுவருகிறார். இரண்டு முறை தேர்வு எழுதியும் போதுமான மதிப்பெண் கிடைக்கவில்லை. 

இருந்தாலும் தொடர்ந்து அவர் முயற்சிசெய்துவந்த நிலையில், ஒரு மாதத்துக்குள் நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு நடைபெறவுள்ளது. 

இதனிடையே திடீரென மாணவி தர்சினி தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தன்னை மாய்த்துக்கொண்டார்.